Wednesday 17 August 2011

என் தந்தை நாடு ரஷ்யா

கூடங்குளம் அணு உலை கட்டாயம் வர வேண்டும்.
அப்போதுதான் இந்தியாவின் மின்சாரப் பஞ்சம் தீரும்.
உலக நாடுகளுக்கே இந்தியா மின்சார சப்ளை செய்யும்.
ஹிரோசிமா போல, சிவகாசியைப் போல, போபர்ஸ் போல,  கூடங்குளத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை.
அப்படி விபத்து ஏற்பட்டாலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் நம் அரசியல்வாதிகள் சிவகாசி விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு கொடுத்தது போல் சில லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக கொடுப்பார்கள்.
நம் கழக - அகழக தலைவர்கள் மேக்கப் முகத்துடன், கண்ணில் கிளிசரின் போட்டுக் கொண்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வார்கள். அல்லது கருப்புக் கண்ணாடியைக் கழற்றி, வராத கண்ணீரைத் துடைத்தவாறு இரங்கலைத் தெரிவிப்பார்கள்.
அதனை நமது குடும்பத்தினர் பார்த்து பெருமிதத்தில் புல்லரிக்கலாம்.
கூடங்குளத்தில் நமது எதிர்கால சந்ததியினர் பாதிக்கப் பட்டால் நமக்கென்ன? நாமே செத்த பிறகு, நம் சந்ததியினர் இருந்தால் என்ன, கெட்டு குட்டிச் சுவராய் போனால் என்ன?
கூடங்குளத்தில் கண்டிப்பாக அணு உலை வர வேண்டும். ஏனெனில் நானும், "அவா-மலம்" பத்திரிகையும், தி குண்டு ஆங்கில நாளிதழும், பழைய பரம்பரை டிவியும், என்னைப் போன்ற சில பதிவர்களும் ரஷ்யாவிடம் ஆசிபெற்ற அரசியல்வாதிகளிடம் கைநீட்டி பணம் வாங்கி விட்டோம்.
அதனால் கொடுத்த காசுக்கு நாங்கள் குரைத்தே தீருவோம்.
கூடங்குளத்தில் அணு உலை வெற்றிகரமாக இயங்கியவுடன், நான் ரஷ்யாவில் சிறப்பு விருந்தாளியாக கலந்து கொள்ளப் போகிறேன்.
ஒருவேளை எனக்கு ரஷ்யாவில் குடியுரிமை கூட கிடைக்கலாம்.
இதைப் பார்த்து என் எதிரி நாடு அமெரிக்காவுக்கு வயித்தெரிச்சல் வரட்டும்.
என் தாய்நாடு இந்தியா, என் தந்தை நாடு ரஷ்யா என பெருமையோடு சொல்லிக் கொண்டு அலைவேன்.